உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,16,320 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,96,496 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 745,100 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் புதிதாக 31,419 பேருக்கு கொரோனா பரவியதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை, 8,80,136 ஆக அதிகரித்துள்ளது. பெல்ஜியத்தில் 42,797, கனடாவில் 42,110 ஈரானில் 87026, சீனாவில் 82, 798, ரஷ்யாவில் 62,773, பிரேசிலில் 49,492, ஸ்பெயினில் 2,13,024, இத்தாலியில் 1,89,973, பிரான்ஸில் 1,58,183, ஜெர்மனியில் 1,53,129, பிரிட்டனில் 1,38,078, துருக்கியில் 1,01, 790, சவுதி அரேபியாவில் 13,930, ஐக்கிய அரபு அமீரகத்தில் 8,756, கத்தாரில் 7, 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,322 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 49,842ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனி - 5,575, ஸ்பெயின் - 22,157, இத்தாலி -25,549, பிரான்ஸ்- 21856, பிரிட்டன் - 18,738, துருக்கி - 2,491, ஈரான் - 5,481, சீனா - 4,632, சவுதி அரேபியா - 121, ஐக்கிய அரபு அமீரகம் - 56, கத்தார் - 10, ரஷ்யா - 555, பிரேசில் - 3,313, பெல்ஜியம் - 6,490, கனடா - 2,147, பாகிஸ்தான் - 235, மலேசியா - 95, சிங்கப்பூர் - 12, இலங்கை- 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.