பழைமையான காந்தஹார்: துணிச்சலாக ஜிம்முக்குச் செல்லும் பெண்கள்

பழைமையான காந்தஹார்: துணிச்சலாக ஜிம்முக்குச் செல்லும் பெண்கள்
பழைமையான காந்தஹார்: துணிச்சலாக ஜிம்முக்குச் செல்லும் பெண்கள்
Published on

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்ட காந்தஹாரில் பெண்களுக்கான சுதந்திர வெளியாக அங்குள்ள உடற்பயிற்சிக்கூடம் உருவாகியுள்ளது. இந்த பெண்களுக்கான ஜிம்மை பெண் உரிமைப் போராளி மர்யம் தூரானி தொடங்கியுள்ளார்.

தீவிரவாதம் தளைத்திருக்கும் ஆப்கன் மண்ணில் தொடர்ந்து பெண்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் போராடிவரும் தூரானி, பெண்களுக்காக ஒரு வானொலி நிலையத்தையும் நடத்திவருகிறார். காந்தஹாரில் பெண்கள் பர்கா அணிந்தே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். குடும்பம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு நிறையவே கட்டுப்பாடுகள் உண்டு. 

மரியம் தூரானியின் சேவையைப் பாராட்டி மிச்செல் ஒபாமாவால் 2012ம் ஆண்டு துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பெண்கள் மட்டுமே வந்துசெல்லக்கூடிய உடற்பயிற்சிக்கூடத்தை அவர் தொடங்கினார். அதில் தினமும் 50 பெண்கள் உடற்பயிற்சி செய்துவருகின்றனர்.

"பெண்களிடம் ஜிம்முக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால் ஆண்களுக்குப் பிடிக்கவில்லை. ஷரியா சட்டத்திற்கு எதிராக ஜிம் இருப்பதாக அவர்கள் கருத்துகிறார்கள். எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்" என்கிறார் மர்யம் தூரானி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com