"ஹெச்1-பி விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவேன்" - ஜோ பிடன் உறுதி..!

"ஹெச்1-பி விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவேன்" - ஜோ பிடன் உறுதி..!
"ஹெச்1-பி விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவேன்" - ஜோ பிடன் உறுதி..!
Published on

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஹெச்1-பி விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடைகளை நீக்குவதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்ற கோஷத்தை முன்வைத்து வரும் டிரம்ப், கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு இறுதி வரை ஹெச்1பி உள்பட பணிகள் தொடர்பான அனைத்து விசாக்களையும் நிறுத்திவைப்பதாக அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் அங்கு பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற ஆசிய அமெரிக்கா மற்றும் பசிபிக் ஐலாண்டர் சார்பில் காணொலி பரப்புரை கூட்டத்தில் ஜோ பிடன் பேசினார். அதிபராக வெற்றி பெற்றால் 100 நாட்களுக்குள் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது குறித்து அவர் விளக்கமளித்தார். முதல் நாளிலேயே ஹெச்1பி விசா தடை நீக்கப்படும் என்ற பிடன், அமெரிக்காவை கட்டமைத்ததில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கு மிக அதிகம் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கப் போவதாகக் கூறி ஹெச்1பி விசாவுக்கு அதிபர் ட்ரம்ப் இடைக்காலத் தடை விதித்துள்ளதால், லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜோபிடனின் வாக்குறுதி முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com