சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு
Published on

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுவாச கோளாறு மற்றும் அதிக காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நோயாளிகளையும் கொரோனா அறிகுறிகளுக்காக பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிதாக வெளியிட்ட அறிவுரையின்படி, கொரோனா பாதித்தவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 முதல் 14 நாட்களுக்குள் ஒருமுறை சோதனை செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய நடைமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சுவாச கோளாறு மற்றும் அதிக காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நோயாளிகளையும் கொரோனா பரிசோதனை செய்யப்படவிருக்கிறது.

முன்னதாக,கொரோனா அறிகுறி இல்லாமல் கடந்த 14 நாட்களில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள், 14 நாட்களில் அறிகுறி தென்பட்டவர்கள் மற்றும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதாரத்துறையினர் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com