குல்பூஷண் ஜாதவ் வழக்கில் நாளை தீர்ப்பு

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் நாளை தீர்ப்பு
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் நாளை தீர்ப்பு
Published on

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. குல்பூஷண் ஜாதவ்வை காப்பாற்றுவது தொடர்பாக பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டு அதற்கு பதிலில்லாத நிலையில், இந்தியா நெதர்லாதின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. சர்வதேச நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை தடை செய்ய வேண்டும் என இந்தியா வாதிட்டது.

ஆனால், வியன்னா ஒப்பந்தப்படி வேவு பார்ப்பவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றம் தலையிட முடியாது என பாகிஸ்தான் வாதிட்டது. இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நாளை மதியம் 3:30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருப்பதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com