“14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள்” தவிக்கும் ஐஸ்லாந்து மக்கள்

ஐஸ்லாந்தில் 14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ள சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
iceland
icelandpt web
Published on

ஐஸ்லாந்தில் கடந்த சில தினங்களில் 1000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த புதன் மற்றும் வியாழன் என இரு தினங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் 1400 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய நாட்களிலும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன.

இதன் காரணமாக ஐஸ்லாந்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழன் முதல் நவம்பர் 16 வரை சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 லட்சத்திற்கும் குறைவான மக்கள் வாழும் ஐஸ்லாந்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட வெப்ப நீரூற்றுகள் உள்ளன. அதேபோல் நாட்டில் கிட்டத்தட்ட 130 எரிமலைகள் உள்ளன. அதில் 33 தற்போது தற்போது செயலில் உள்ளது. ஐரோப்பாவில் இது அதிகம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தொடர்ச்சியான பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டில் அவசரநிலையை அறிவித்துள்ளது ஐஸ்லாந்து அரசு. அந்நாட்டு அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், “நில அதிர்வு நடவடிக்கைகளால் நாட்டில் எரிமலை வெடிப்புகள் ஏற்படலாம்” என தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மட்டும் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதிகளில் 4000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் உள்ள கிரிண்டாவிக் பகுதிக்கு அருகே 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தின் வானிலை அலுவலகமான iceland meteorological office தகவல்படி, கடந்த அக்டோபர் முதல் 24 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணி முதல் மறுநாள் பிற்பகல் 2 மணி வரை மட்டும், கிட்டத்தட்ட 14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com