பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுத்தால் சட்டவிரோதம்: ஐஸ்லாந்தில் சட்டம்!

பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுத்தால் சட்டவிரோதம்: ஐஸ்லாந்தில் சட்டம்!
பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுத்தால் சட்டவிரோதம்: ஐஸ்லாந்தில் சட்டம்!
Published on

ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகச் சம்பளம் கொடுத்தால் ஐஸ்லாந்தில் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள தீவு, ஐஸ்லாந்து. சுமார் 3 லட்சத்து 36 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த நாடு, சுற்றுலா மற்றும் மீன் பிடி தொழில் மூலம் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு. பாலின சமத்துவம் உள்ள இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் 50 சதவிகித பெண் உறுப்பினர்கள் உள்ளனர். 

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்படுகிறது. சரிசமமான சம்பள விகிதம் என்பது இல்லை. இந்நிலையில் ஆண்களுக்கு இணையான சம்பளத்தை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஐஸ்லாந்து நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், புத்தாண்டில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. உலகிலேயே இப்படியொரு சட்டம் இயற்றி இருக்கும் முதல் நாடு, ஐஸ்லாந்துதான். இதன் மூலம் அந்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆண்களுக்கு இணையான சம்பளத்தைக் கொடுக்க இருக்கின்றன. 

இந்த சட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com