அண்டார்டிகாவில் நியூயார்க் நகரத்தை விடவும் மிகப்பெரிய பனிக்கட்டி வெடிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது
பூமியின் மொத்த பரப்பளவில் 71 சதவிகிதம் நீரினால் சூழப்பட்டுள்ளது. மீதமுள்ள 29 சதவிகிதம் தான் நிலப்பரப்பு. பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் மற்றும் அடுக்குகள் உருகி வருகின்றன. அதனால் ஒவ்வொரு நாளும் கடல் நீரின் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அண்டார்டிகாவில் நியூயார்க் சிட்டியை விடவும் மிகப்பெரிய பனிக்கட்டி வெடிப்புக்கு உள்ளாகியுள்ளது.
பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) வெளியிட்ட தகவலின்படி, இந்த பனிக்கட்டி 1270 சதுர கிலோமீட்டர் அளவு கொண்டது என தெரிவித்துள்ளது.பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆராய்ச்சி மையத்தில் அருகே இந்த மிகப்பெரிய பனிக்கட்டி வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பனிக்கட்டி வெடிப்பால் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் ஆராய்ச்சி மையம் தற்போது காலி செய்யப்பட்டுள்ள்து. அங்கு பனியில் இருந்த சுமார் 12 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த பனிக்கட்டியின் அளவு மிகப்பெரியது என்பதால் வெடிப்பு ஏற்பட்டால் அதிகமான பனிக்கட்டிகள் வெளியேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக BAS தெரிவித்துள்ளது.