இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்திய விமானப்படை சிங்கப்பூரில் இருந்து 4 கண்டெய்னர்களில் ஆக்ஸிஜன் கலன்களை எடுத்துவர உள்ளது.
இன்று காலை 2 மணி அளவில் சி -17 விமானம் மூலம் ஹிந்தன் விமானதளத்தில் இருந்து புறப்பட்ட ராணுவ வீரர்கள் சரியாக காலை 7.45 மணிக்கு, சிங்கப்பூர் சாங்கியில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்து 4 கண்டெய்னர்கள் நிரம்ப கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கலன்களை எடுத்துக்கொண்ட வீரர்கள் இன்று மாலை இந்தியாவின் பனகர் விமானத்தளத்தை அடைய உள்ளனர்.

We stand with India in its fight against Covid-19. Through a bilateral and multi-agency effort, an @IAF_MCC transport plane picked up 4 cryogenic oxygen containers at @ChangiAirport in Singapore this morning. ????? @PMOIndia @MEAIndia @SpokespersonMoD @IndiainSingapor pic.twitter.com/mU59w1yAw6
— Singapore in India (@SGinIndia) April 24, 2021

இது குறித்து உள்துறை அமைச்சர் கூறும் போது, “ மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கலன்களை எடுத்து வர வெளிநாடுகளில் ராட்சத அளவிலான டேங்கர்கள் கொண்டுவரப்படும்” என்றார்.

Acting swiftly to meet the high demand of oxygen requirement, India procured 4 containers of cryogenic O2 tanks from Singapore today. There was active coordination btw @IndiainSingapor and multiple agencies in Singapore to facilitate transfer. @MEAIndia @MoHFW_INDIA @PMOIndia pic.twitter.com/Ae4pdGjGIP
— India in Singapore (@IndiainSingapor) April 24, 2021

இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் பற்றாகுறை நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி நிலைமை படு மோசாமாக மாறியிருக்கிறது. இன்று காலை இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது டெல்லி அரசு இப்படியே போனால் நிலைமை சீரழிந்துவிடும் என்றும் மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு 480 மெட்டிக் டன் தேவைப்படுவதாக கூறியுள்ளது.