"பதவியில் இல்லாத இம்ரான் கான் மிக ஆபத்தானவன்" - எதிர்க்கட்சிகளுக்கு பகீர் மிரட்டல்

"பதவியில் இல்லாத இம்ரான் கான் மிக ஆபத்தானவன்" - எதிர்க்கட்சிகளுக்கு பகீர் மிரட்டல்

"பதவியில் இல்லாத இம்ரான் கான் மிக ஆபத்தானவன்" - எதிர்க்கட்சிகளுக்கு பகீர் மிரட்டல்
Published on

"பிரதமர் பதவியில் இருந்தபோது நான் ஆபத்தானவன் இல்லை; ஆனால், பதவியில் இல்லாதபோது நான் மிக ஆபத்தானவன்" என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் வெளியேற்றப்பட்டார். தற்போது புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இதனிடையே, பிரதமர் பதவியை இழந்தது முதலாக எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை இம்ரான் கான் முன்வைத்து வருகிறார்.

வெளிநாட்டு சதி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாகவும், வெளிநாடுகளின் கைக்கூலிகளே இப்போது புதிய அரசை அமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இம்ரான் கான் நேற்று இரவு பேரணி நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், "பாகிஸ்தானில் ஒவ்வொரு பிரதமர் வெளியேற்றப்படும் போது மக்கள் அதனை கொண்டாடுவார்கள். ஆனால், இந்த முறை நான் வெளியேற்றப்பட்டதை கண்டு மக்கள் ஆத்திரப்படுகின்றனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களே இதற்கு சாட்சியாகும். அமெரிக்காவின் சதிச்செயலால் பிரதமர் பதவியில் இருந்து நான் தூக்கி எறியப்பட்டிருக்கிறேன். அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசு தான் தற்போது பாகிஸ்தானை ஆட்சி புரிகிறது.

இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம். இந்த இறக்குமதி அரசுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். நான் பிரதமராக பதவி வகித்தபோது என்னை பார்த்தவர்கள் தப்புக் கணக்கு போடுகிறார்கள். பதவியில் இருக்கும் போது நான் ஆபத்தானவாக இல்லை. ஆனால், பதவி இல்லாத இம்ரான் கான் மிகவும் ஆபத்தானவன். எதிர்க்கட்சிகள் இதனை விரைவில் புரிந்து கொள்வார்கள்" என அவர் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com