நான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை

நான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை
நான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் பொருத்தப்படுவதற்கு முன்பாக எடுத்தப்படம் என்று சில நாட்களாக டாக்டர் ஆயிஷாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் படுவைரைல் ஆகியது. ஆனால் இறந்துபோனதாக சொல்லப்பட்ட டாக்டர் ஆயிஷா எனப்படும் புகைப்படம், என்னுடைய படம்தான் என்று உண்மையை சொல்கிறார் தென்னாப்ரிக்காவில் இறுதி ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவி.

தன்னுடைய ஆறு புகைப்படங்களை திருடி டாக்டர் ஆயிஷா என்ற பெயரில் போலிக்கணக்கு உருவாக்கப்பட்டு அனைவரையும் ஏமாற்றியுள்ளனர் என்று சொல்கிறார் அந்த மாணவி. இதுபற்றி பேசும் அவர் தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை.

அவர் பேசுகையில் “தனது புகைப்படங்களை ஒரு போலி கணக்கால் பயன்படுத்தப்படுவதாக சமீபத்தில் தான் அறிந்தேன். நான் இறந்துவிட்டேனா என்று கேட்டு எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த புகைப்படங்கள் என்னுடையவை, எனது சமூக ஊடகக் கணக்கையும் எனது குடும்பத்தினரின் கணக்குகளையும் பின்தொடர்ந்த ஒருவரால் இப்படங்கள் எடுக்கப்பட்டது" என்று கூறும் அப்பெண் அந்த பெண் தென்னாப்ரிக்காவின் வால்டர் சிசுலு பல்கலைக்கழகத்தின் மத்தத்தா வளாகத்தில் இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவி ஆவார்.

மேலும் அது உண்மையில் போலி கணக்கால் பயன்படுத்தப்பட்ட தனது புகைப்படங்கள் என்பதைக் காட்ட அவரது கல்லூரி அடையாள அட்டையையும் ஆதாரமாக அனுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com