கொரோனாவுக்கு மருந்தா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ? - பின்னணி என்ன ?

கொரோனாவுக்கு மருந்தா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ? - பின்னணி என்ன ?
கொரோனாவுக்கு மருந்தா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ? - பின்னணி என்ன ?
Published on

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்பந்தித்து கேட்கும் அளவுக்கு முக்கியமான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது‌ கடந்த சில நாள்களாக அடிக்கடி உச்சரிக்கப்படும் மாத்திரையின் பெயர். அதற்கு இரண்டு காரணங்கள். ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய‌ மருத்துவ ஆய்வு நிறுவனமும் மேலும் சில நாடுகளும் பரிந்துரைத்தது முதல் காரணம். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கேம் சேஞ்ஜர் (GAME CHANGER) ஆக இருக்கும் என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவை நிர்பந்தித்து மாத்திரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வைத்தது இரண்டாவது கார‌ணம். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை மலேரியா மற்றும் முடக்கு‌வாதத்துக்கு மருந்தாக பயன்படுகிறது.

ஒரு மாதத்துக்கு 40 டன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை தயாரிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. உலகில் தயாரிக்கப்படும் மொத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயினில் 70% இந்தியாவில் உற்பத்தியாகிறது. 4 பெருநிறுவனங்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தயாரிப்பில் முன்னணியில் உள்ளன. 200 எம்.ஜி., 400 எம்.ஜி. என இரண்டு அளவுகளில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 500 அட்டைகள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் விற்பனையாகும் என்று கூறுகின்றனர் மருந்து விற்பனையாளர்கள்.

ஒரு அட்டையில் 10 அல்லது 15 ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் இருக்கும். 200 எம்.ஜி. அளவு கொண்ட 10 ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளின் உத்தேச விலை 65 ரூபாய். 400 எம்.ஜி. அளவு கொண்ட 10 ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளின் உத்தேச விலை 125 ரூபாய். மருத்துவரின் பரிந்துரையின்றி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை உட்கொள்ளக் கூடாது என இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com