அச்சுறுத்தும் புயல் : கடற்கரையை காலி செய்த மக்கள்

அச்சுறுத்தும் புயல் : கடற்கரையை காலி செய்த மக்கள்
அச்சுறுத்தும் புயல் : கடற்கரையை காலி செய்த மக்கள்
Published on

ஃபிளாரென்ஸ் புயலால், வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவில் உள்ள கடற்கரை பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் ஃபிளாரென்ஸ் புயல் மிகுந்த வலுவான நிலையில் நாளை வடக்கு கரோலினாவை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் நாளை வடக்கு கரோலினாவை ஓட்டிய கடலோரப் பகுதியில் மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபிளாரென்ஸ் புயல் கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக விர்ஜினியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 40 அங்குலம் அளவுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிளாரென்ஸ் புயலால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், விர்ஜினியா, மற்றும் கரோலினா மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com