வெடித்து சிதறிய சூரியப்பகுதி.. சுழலும் சூறாவளி.. பூமிக்கு ஆபத்தா? அச்சத்தில் விஞ்ஞானிகள்!

வெடித்து சிதறிய சூரியப்பகுதி.. சுழலும் சூறாவளி.. பூமிக்கு ஆபத்தா? அச்சத்தில் விஞ்ஞானிகள்!
வெடித்து சிதறிய சூரியப்பகுதி.. சுழலும் சூறாவளி.. பூமிக்கு ஆபத்தா? அச்சத்தில் விஞ்ஞானிகள்!
Published on

அறிவியலாளர்களுக்கு எப்போதும் சவாலாக இருக்கக் கூடிய சூரியனின் வட துருவத்தில் இருந்த ஒரு பகுதி உடைந்து விழுந்ததை நாசா படம்பிடித்து வெளியிட்டிருக்கிறது.

சூரியனின் மிகப்பெரிய பாகம் ஒன்று வெடித்துச் சிதறியது குறித்த படங்களும் வீடியோக்களும் விஞ்ஞானிகளை பெரும் அச்சுறுத்தலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாக்கியிருக்கிறது.

ஏனெனில் சூரியனின் ஒரு பகுதி உடைந்ததால் அதன் மேற்பரப்பில் நெருப்பு சூறாவளி ஏற்பட்டு சுழன்றுக் கொண்டிருக்கிறதாம். இதனால் புவியில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழுமோ என குழப்பம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

சூரியனில் நிலவும் விந்தைகள் குறித்து நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியும், ஐரோப்பாவின் சோலார் ஆர்பிட்டரும் திட்டங்களை செயல்படுத்தி ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக பதிவான சூரியனில் ஏற்பட்டுள்ள நெருப்பு சூறாவளி காட்சியை நாசா விஞ்ஞானி தமிதா ஸ்கோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து சூரிய பகுதியில் இருந்து ஒரு துண்டே வெடித்துச் சிதறி சூறாவளியாக சுழன்றுக் கொண்டிருப்பதால் இதனால் பூமி என்ன மாதிரியான தாக்கம் உண்டாகும் என்ற அச்சத்தில் ஆராய்ச்சிகளை அறிவியலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com