அயோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில்முகநூல்

”பட்டினி குறியீட்டில் 111வது இடம்; 1800 கோடியில் கோயில்” - உலகத்தின் பார்வையில் ராமர் கோயில் விழா!

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிர்ஷ்டையை எவ்வாறு சர்வாறு சர்வதேச ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிர்ஷ்டையை எவ்வாறு சர்வாறு சர்வதேச ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

திங்கள் கிழமை அன்று நடைபெற்ற அயோத்தி ராமர் கோவிலின் பிராண பிரிதிர்ஷ்டை கோலாகலமாக கொண்டாடப்பட்டது, கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் இதன்பின்புறம் , 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு அதனை தொடர்ந்து அரங்கேறிய வகுப்புவாத கலவரம் ஆகியவை மற்றொருபுறம் உள்ள தரப்பினர்களால் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச ஊடகங்கள் இந்நிகழ்வை எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பது குறித்து காணாலாம்.

1. தி கார்டியன்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இந்து கோவிலை துவங்கிவைக்கிறார் நரேந்திர மோடி - தி கார்டியன்.

2. சிஎன்என்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சர்ச்சைக்குரிய இந்து கோவிலை ’புதிய ஆன்மீக இந்தியா’ என்ற பெயரில் மோடி துவங்கி வைக்கிறார் - சிஎன்என்.

3. தி நியூயார்க் டைம்ஸ்

இந்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் இந்தியாவை நோக்கிய மிகப்பெரிய கோவிலை மோடி திறந்துவைக்கிறார். எதனால் இந்தியாவில் புதிய ராமர் கோவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது? - தி நியூயார்க் டைம்ஸ்

4. டான்

தன்னுடிய ஆட்சியில் மாற்றம் அடைந்து கொண்டிக்கும் இந்தியாவை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைத்தார் - டான்

5. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்

இந்தியாவின் மோடி அயோத்தியின் ராமர் கோவிலுக்கு தலைமை தாங்கிறார்!

6. தி சவாலா வாடா

உலகளாவிய அளவில் பசி குறியீட்டில் இந்தியா 111 ஆவது இடத்தில் இருக்கும் நிலையில் ரூ 1800 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கோவில்!

7. பிபிசி

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அயோத்திராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com