ஸ்பெயின் நாட்டில் குதிரைகள் தீ மிதிக்கும் திருவிழா நடைபெற்றது.
ஸ்பெயின் நாட்டில் சுமார் 500 ஆண்டுகளுக்குப் பழமையான லுமினாரியஸ் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் விலங்குகள் புனிதத்தன்மை பெற ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் சாலையின் நடுவே பிரமாண்ட தீக்குண்டம் அமைக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட குதிரைகள் கடந்து சென்றன. தீமிதித் திருவிழாவில் குதிரைகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர். பாரம்பரியத் திருவிழா என்ற பெயரில் குதிரைகளை தீமிதிக்க வைப்பதற்கு ஸ்பெயின் விலங்குகள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.