உலகின் பல நாடுகளில் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பதால் இந்தியா உட்பட 8 நாடுகளின் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.
சீன நகரமான ஹாங்காங் இன்று கடுமையான புதிய கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது, இதன்படி ஓமைக்ரான் பரவலாய் தடுக்கும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளிலிருந்து வரும் விமானங்களை ஹாங்காங் நிர்வாகம் தடைசெய்துள்ளது, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கும் ஹாங்காங் தடை விதித்துள்ளது.
ஹாங்காங் தலைவர் கேரி லாம், வெள்ளிக்கிழமை முதல் மாலை 6 மணிக்குப் பிறகு உணவகங்களில் உணவருந்த அரசாங்கம் தடை செய்யும் என்றும், நீச்சல் குளங்கள், விளையாட்டு மையங்கள், பார்கள், கிளப்புகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற இடங்களை மூடும் என்றும் கூறினார்.
ஜனவரி 4ம் தேதி நிலவரப்படி, ஹாங்காங் நகரத்தில் 114 ஓமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, இந்த தொற்றுகளில் பெரும்பாலானவை விமான நிலையத்தில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் 21 நாள் தனிமைப்படுத்தலின் போது கண்டறியப்பட்டது.