விமானத்தை கடத்த முயற்சி: ஒருவர் சுட்டுக் கொலை

விமானத்தை கடத்த முயற்சி: ஒருவர் சுட்டுக் கொலை
விமானத்தை கடத்த முயற்சி: ஒருவர் சுட்டுக் கொலை
Published on

பங்களாதேஷில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தை கடத்த முயற்சி செய்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பங்களாதேஷ் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம் பிமான் ஏர்லைன்ஸ். இந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று 148 பயணிகளுடன் தலை நகர் டாக்காவிலிருந்து துபாய்க்கு நேற்று மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டது. அங்கிருந்து சிட்டக்காங் சென்று அங்குள்ள பயணிகளையும் ஏற்றிக்கொண்டு இந்த விமானம் துபாய் செல்வது வழக்கம். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஒரு பயணியின் நடவடிக்கைகள் சந்தே கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து விமானம் சிட்டகாங்கில் அவரசரமாகத் தரையிறக்கப்பட்டது. அப்போது அந்த பயணி, விமானத்தைக் கடத்தப்போவதாக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மிரட்டினார். விமானியின் அறைக்குள்ளும் நுழைய முயன்றார். இந்த தகவல் ராணுவ வீரர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக அவர்கள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். 

இதற்கிடையே, அவசர வழியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதிரடியாக உள்ளே நுழைந்த வீரர்கள், சந்தேகப் பயணியைச் சுட்டு வீழ்த்தினர். அவரிடமிருந்த துப்பாக்கியையும் கைப்பற்றினர்.

கொல்லப்பட்டவர் பங்களாதேஷை சேர்ந்த மஹதி என்றும், முன்னதாக அவர் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பேச வேண்டும் என தெரிவித் தாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com