அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
SACRAMENTO சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் நீரில் ஊர்ந்தபடி சென்றன. தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக, வாகனங்களில் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது ஏற்படும் காட்டுத்தீ மற்றும் கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்புகளை கலிஃபோர்னியா சந்தித்து வருகிறது.