போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று 8 ஆண்களாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உடல் நலக்கோளாறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து சியோல் நேஷனல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அதிக அளவு போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 2 லட்சத்து 6 ஆயிரத்து ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20 முதல் 59 வயதுடையவர்களிடம் 8 ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இரவு நேரத்தில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிவோர் அல்லது தங்கியிருப்போர் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றனர். ஒலி அளவு 55 டெசி பில்சுக்கு மேல் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் ஒலி அளவு 40 டெசிபிலுக்கு மேல் இருக்க கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர இதய நோய்கள், மனநிலை பாதிப்பு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் போன்றவை உருவாகும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.