முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஏழு நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஹவாய் மாகாணம் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்க அதிபரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முதல் மாகாணம் ஹவாய்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையின்படி மார்ச் 16-ல் இருந்து 90 நாட்களுக்கு ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாடுகளை சார்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.
இதுகுறித்து, ஹவாயின் தலைமை வழக்கறிங்கர் டக் சின் கூறுகையில், இது முஸ்லிம்களுக்கு எதிரான தடை என்று விமர்சித்தார்.
ஹவாய் மாகாணத்தில் வாழும் 20 சதவீதம் பேர் வெளிநாட்டை சார்ந்தவர்கள். இங்குள்ள ஒரு லட்சம் பேர் குடியுரிமை பெறாதவர்கள், 20 சதவீதம் தொழிலாளர்கள் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரையும் டிரம்பின் தடை பாதிக்கும் என டக் சின் குறிப்பிட்டார்.