ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு பணம் வசூலிப்பது ஊழல்: சிவ அய்யாதுரை

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு பணம் வசூலிப்பது ஊழல்: சிவ அய்யாதுரை
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு பணம் வசூலிப்பது ஊழல்: சிவ அய்யாதுரை
Published on

அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழைத் தவிர மற்ற 6 சொம்மொழிகளுக்கு இருக்கைகள் உள்ளன. மூத்த மொழியான தமிழ் மொழிக்கு இருக்கை அமைதற்கு தற்போது பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் இருக்கைக்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. 

இதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் அளித்துள்ளது. நடிகர் விஷால் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதேபோன்று, திரைப்பிரபலங்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் நிதி அளித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் 25 லட்சம் ரூபாய், மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ரூ.5 லட்சம் என பலர் நிதிகளை வாரி வழங்கினர். மேலும் தமிழ் அமைப்புகளும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நிதித் திரட்டி வருகின்றன. இவை மட்டுமின்றி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நிதித் திரட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் விவகாரத்தில் தற்போது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக் கழகம் தமிழகர்கள் ஏமாற்றுவதாக அமெரிக்க வாழ் இந்தியரும் விஞ்ஞானியுமான சிவ அய்யாதுரை குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் இருக்கை அமைக்க பணம் வேண்டும் என்று வலியுறுத்துவது மிகப்பெரிய ஊழல் என்று அவர் சாடியுள்ளார். சிவ அய்யாதுரை அமெரிக்க செனட்டில் எம்.பி.யாக உள்ளார். தமிழ் வரலாற்றை திருத்தி எழுதவும், ஆதிக்கம் செலுத்துவதற்காக நம்முடைய பணத்தை கொண்டே முயற்சி செய்வார்கள் என்று அவர் சாடினார்.

இதுஒருபுறம் இருக்க, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் மீது தவறான குற்றச்சாட்டுகளை சிவ அய்யாதுரை எழுப்பி வருவதாக ஹார்வர்ட் பல்கலைக் கழக தமிழ் இருக்கை தொடர்பான பேஸ்புக் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது. சிவ அய்யாதுரைக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com