இங்கிலாந்து அரசக் குடும்ப புத்தகத்தில் இடம்பெறாத ஹாரி - மேகன் தம்பதியினர் !

இங்கிலாந்து அரசக் குடும்ப புத்தகத்தில் இடம்பெறாத ஹாரி - மேகன் தம்பதியினர் !
இங்கிலாந்து அரசக் குடும்ப புத்தகத்தில் இடம்பெறாத ஹாரி - மேகன் தம்பதியினர் !
Published on

அரச குடும்பம் குறித்து வரவிருக்கும் புத்தகத்திலிருந்து ஹாரி - மேகன் தம்பதியினர் தங்களை விலக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் எனவும் அவர்கள் கூறினர். இவர்களின் இந்த முடிவால் அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தில் இருந்து விலகியதை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் 'ராயல்' என்னும் பட்டத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என பிரிட்டன் ராணி எலிசபெத் உத்தரவிட்டிருந்தார். இப்போது ஹாரியும் - மேகனும் கனடாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அரச குடும்பத்தில் தங்கள் பற்றி வரவிருக்கும் புத்தகத்திலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் சுயசரிதைக்காக நேர்காணல் செய்யப்படவில்லை என்றும் அதற்கு எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இது குரித்து பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் "பைஃண்டிங் பிரீடம்" (Finding Freedom) என்ற தலைப்பில் அரசக் குடும்பம் குறித்தப் புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது, மேலும் அரண்மனை மற்றும் பத்திரிகைகளுடன் தம்பதியினரின் விரக்தி குறித்து வெளிச்சம் போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புத்தகத்திற்காக இளவரசர் மற்றும் மேகன் ஆகியோர் பேட்டி எடுக்கப்படவில்லை என்றும் அதற்கு அவர்கள் பங்களிக்கவில்லை என்று ஹாரி - மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com