அரச குடும்பத்திலிருந்து ஹாரி-மேகன் தம்பதி விலகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

அரச குடும்பத்திலிருந்து ஹாரி-மேகன் தம்பதி விலகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
அரச குடும்பத்திலிருந்து ஹாரி-மேகன் தம்பதி விலகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
Published on

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் எனவும் ஹாரி-மேகன் தம்பதி கூறியிருந்தனர்.

இவர்களின் இந்த முடிவால் அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஹாரி-மேகன் தம்பதி இனி பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இல்லை எனவும், இனி அவர்கள் Royal Highness என்ற பட்டத்துடன் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com