காஸாவில் குளியல், கழிப்பறைகளைச் சுட்டுத் தள்ளிய ஹமாஸ் அமைப்பினர்.. வைரல் வீடியோ

காஸா எல்லை அருகே குளியல் மற்றும் கழிப்பறைகளை, ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளியபடி செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
கழிப்பறை
கழிப்பறைட்விட்டர்
Published on

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 8வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். எனினும் அங்கு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்முகநூல்

இஸ்ரேலுக்கு பதிலடி தரும் விதமாக, ஹமாஸும் நேற்று 150 ராக்கெட்களை ஏவியதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே காசா பகுதியில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் 24 மணிநேரத்தில் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. அதற்கான கெடு, இன்று மாலைக்குள் முடிவடைய இருக்கிறது. இதனால், அங்கு தரைவழி தாக்குதல் தொடங்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: நீடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்.. கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் வருமா? இந்திய வர்த்தம் பாதிக்குமா?

இந்த நிலையில், குளியல் மற்றும் கழிப்பறைகளை ஹமாஸ் அமைப்பினர் சுடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, காசா எல்லையின் ட்ரைப் ஆஃப் நோவா இசை நிகழ்ச்சி அரங்கத்தில் உள்ள குளியல் மற்றும் கழிப்பறைகளில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள கழிப்பறைகளின் ஒவ்வொரு கதவுகளை நோக்கி சுட்டப்படியே செல்கிறார்.

கழிப்பறையின் பிளாஸ்டிக் கதவுகள் வழியாக, தோட்டாக்கள் முறையாக உள்ளே செல்வதை அந்த வீடியா காட்சிகள் காட்டுகின்றன. அதில் மக்கள் யாரும் உள்ளே இருந்தார்களா என்பது குறித்து எந்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. அதுபோல், அந்த ஹாசா அமைப்பைச் சேர்ந்தவர் சுட்டதில், உள்ளே இருந்தவர்கள் யாரும் இறந்துபோனார்களா என்ற விவரமும் தெரியவில்லை. அதைப்பற்றி எல்லாம் ஹாசா அமைப்பினர் கண்டுகொள்ளாமல் துப்பாக்கியால் சுட்டப்படி செல்வதையே அந்த வீடியோ காட்டுகிறது.

இதையும் படிக்க: போர் நிறுத்தம்? பச்சைக்கொடி.. ராணுவ பலத்தை அதிகரிக்கும் இஸ்ரேல்

இந்த வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) பகிர்ந்துள்ளது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, "நோவா இசை நிகழ்ச்சியின்போது ஹமாஸ் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக கழிப்பறையில் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். ஹமாஸ் யாரைக் கொல்கிறார்கள் என்று கவலைப்படுவதில்லை என்பதை இது காட்டுகிறது" எனப் பதிவிட்டுள்ளது. இதில் 250 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் போட்டி: களமிறக்கப்பட்ட ஷுப்மன் கில்.. முதல் விக்கெட்டை சாய்த்தார் முகமது சிராஜ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com