இஸ்ரேல் தாக்குதலில் சுமார் மூன்றாயிரம் குழந்தைகள் உட்பட 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதேநேரத்தில் சேர்த்து, காசாவிற்குள் தரைவழித்தாக்குதலையும் இஸ்ரேல் தொடர்ந்துவருகிறது. போர் விமானங்கள், டிரோன்களுடன் சேர்த்து, காசாவிற்குள் தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடர்ந்துவருகிறது.
இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் காசா நகரத்தின் இணைய கேபிள் அமைப்பு முற்றிலும் அறுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காசாவிற்குள் இணையம் மற்றும் தொலை தொடர்பு சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
தங்களின் பணியாளர்கள் ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஐநாவும், செஞ்சிலுவை சங்கமும் தெரிவித்துள்ளது.
சர்வதேச பத்திரிகையாளர்கள் பலர் உள்ளே நடக்கும் தகவலை வெளியே தெரிவிக்க முடியாமல் திண்டாடுவதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் விமான படை வடக்கு காசாவில் பல பகுதிகளில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
காசா மீது இஸ்ரேல் தரை வழிப் போரை தொடங்கியதாக ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சபாஃடி தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான பேரழிவு தான் தரை வழி தாக்குதலில் விளைவாக இருக்க போகிறது என அவர் தெரிவித்துள்ளார். அரபு நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது என்பது அர்த்தமற்ற போரையும், இந்த அர்த்தமற்ற கொலைகளையம் அங்கீகரிப்பதாகும்.
ஐநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் போரை நிறுத்த முடியாத ஒவ்வொரு நாட்டின் வாக்கையும் லட்சக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். வரலாறு தீர்ப்பளிக்கும் என ஜோர்டான் வெளியுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார்..