பாலஸ்தீனத்தின் ஃபதா இயக்கத்துடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக காஸா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விரிவான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த மூன்று நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பாலஸ்தீனத்தில் இரு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஹமாஸுக்கும் ஃபதா இயக்கத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை ஃபதா இயக்கமும், காஸா பகுதியை ஹமாஸ் இயக்கமும் நிர்வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.