நியூசி.யில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆஸி. பயங்கரவாதி: நேரடி ஒளிபரப்பு செய்ததும் அம்பலம்

நியூசி.யில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆஸி. பயங்கரவாதி: நேரடி ஒளிபரப்பு செய்ததும் அம்பலம்

நியூசி.யில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆஸி. பயங்கரவாதி: நேரடி ஒளிபரப்பு செய்ததும் அம்பலம்
Published on

நியூசிலாந்தில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டது ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த பயங்கரவாதி என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அதோடு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்பும் செய்துள்ளான்.

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் ஹாக்லே பூங்கா அருகே, மஜித் அல் நூர் என்ற மசூதியில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் இன்று தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந் தனர். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். அப்போது அங்கு மசூதியில் பயங்கரமாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து பங்களாதேஷ் வீரர்கள் தப்பி, ஓட்டலுக்குப் பத்திரமாக வந்து சேர்ந்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதற்கிடையே மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இயந்திர துப்பாக்கியுடன் வந்த ஒருவன் தொழுகையில் ஈடுபட்டிருந்த வர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். சுமார் 15 நிமிடம் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தான். இதையடுத்து பலர் அங்கேயே உயி ரிழந்தனர். போலீசார், மசூதியை சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார் என்கிற விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள தாகவும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயங்கரவாதி என ஆஸ்திரே லிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘’இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவன். வலது சாரி, கொடூரமான பயங்கர வாதி’’ என்று தெரிவித்துள்ளார். அவன் யார் என்ற விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். 

நியூசிலாந்து பிரதமர் ஆர்டெர்ன் கூறும்போது, ‘’இது நியூசிலாந்தின் கருப்புத் தினத்தில் ஒன்று. இந்த அசாதாரண சம்பவம், இதற்கு முன் நடந்தி ராத பெரும் வன்முறை. இது பயங்கரவாத தாக்குதல்தான்’’ என்று தெரிவித்துள்ளார். 

(துப்பாக்கிச் சூடு நடத்தியவன்)

இதற்கிடையே இந்த தாக்குதலில் ஈடுபட்டவன், தாக்குல் சம்பவத்தை சமூக வலைத்தளத் தில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்துள்ளான். காரில் அந்த மசூதிக்கு வந்ததில் இருந்து துப்பாக்கிச் சூடு வரை அதில் லைவ் செய்துள்ளான் என்பதும் தெரிய வந்துள்ளது. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com