உலகின் மிகப் பெரிய மினியேச்சர் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 49 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்ட இந்த மினியேச்சரில் ஆசியா உள்ளிட்ட 5 கண்டங்களின் முக்கிய கட்டடங்கள், சுற்றுலாத் தளங்கள் இடம்பெற்றுள்ளன.
குலிவேர்ஸ் கேட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மினியேச்சரில் லண்டனின் புக்கிங்காம் அரண்மனை, பிரான்சின் ஈஃபில் டவர், இந்தியாவின் தாஜ் மஹால், சிங்கப்பூரின் மெரினா பே உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட கட்டடங்கள், சுற்றுலாத் தலங்களின் மாதிரிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 600 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதை உருவாக்கியுள்ளனர். மினியேச்சரை உருவாக்க சுமார் 260 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளது.