"இதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது!" - ட்ரம்ப்பை கலாய்த்த கிரேட்டா தன்பெர்க்

"இதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது!" - ட்ரம்ப்பை கலாய்த்த கிரேட்டா தன்பெர்க்
"இதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது!" - ட்ரம்ப்பை கலாய்த்த கிரேட்டா தன்பெர்க்
Published on

கடைசியாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்போதும் ட்ரம்பை கலாய்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க். இவரை 2019-ஆம் ஆண்டின் 'பர்ஸன் ஆஃப் தி இயர்' (Person of the Year) என டைம் பத்திரிகை வெளியிட்டிருந்தது. தற்போது 18 வயதாகும் இவர் ``உங்களுக்கு எவ்வளவு தைரியம்" என்ற கேள்வியை அமெரிக்காவில் காலநிலை குறித்து நடந்த உச்சி மாநாட்டில் கேட்ட பின் உலக அளவில் பேசப்படும் நபரானார். சிறிய வயதில் தன் நடவடிக்கைகள் மூலம் மக்களைச் சுற்றுச்சூழல் குறித்தும் காலநிலை மாற்றம் குறித்தும் சிந்திக்க வைத்தவர்.

இவருக்கும் அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப்புக்கும் இடையே நிகழந்த மோதல் உலகமறிந்தது. 2019-ஆம் ஆண்டின் 'பர்ஸன் ஆஃப் தி இயர்'(Person of the Year) என கிரேட்டாவை டைம் பத்திரிகை பாராட்டியபோது ட்ரம்ப், ''இது அபத்தமானது. கிரேட்டா தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். பிறகு ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு தனது நண்பருடன் செல்லவேண்டும். Chill Greta, Chill!'' என கேலிசெய்து ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலுக்கு பதிலாக, 11 மாதங்கள் காத்திருந்து அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகிய நேரத்தில் ட்ரம்ப் கொந்தளித்து, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அப்போது, ட்ரம்ப்பின் கேலி வார்த்தைகளையே அவருக்கே திருப்பி சொல்லும் வகையில் கிரேட்டா... ''இது அபத்தமானது. ட்ரம்ப் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். பிறகு ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு தனது நண்பருடன் செல்லவேண்டும். Chill Donald, Chill!'' என்று ட்வீட் செய்தார். இப்படி இவர்கள் மோதல் தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில், ட்ரம்ப் கடைசியாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார் கிரேட்டா.

அதில், ``அவர் மிகவும் மகிழ்ச்சியான வயதானவரைப் போல் தெரிகிறது. அவருக்கு பிரகாசமான மற்றும் அற்புதமான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறேன். இதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கிண்டலாக பதிவிட்டிருக்கிறார். அதை அவர் இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.

எனினும், ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக தடைசெய்யப்பட்ட ட்ரம்ப், கிரேட்டா தன்பெர்க்கின் ட்வீட்க்கு பதிலளிக்க முடியாது. இது அவர்களின் சமூக ஊடக மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com