பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடிவரும் சிறுமி கிரேட்டா தன்பெர்க், தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடாமல், போராட்டம் நடத்தி
கொண்டாடியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களுக்கு தலைமை வகித்தவர் ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவி கிரேட்டா
தன்பர்க். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பதாகையுடன் தனி ஆளாக ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் போராட்டத்தை தொடங்கியவர்.
இச்சிறுமி, தனது 17 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். பிறரைப்போல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதில் விருப்பம் இல்லை
எனக்கூறிய கிரேட்டா, பருவநிலையை காப்பதற்காக 7 மணி நேர தொடர் போராட்டத்தை முன்னெடுத்தார்.
ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய இவர் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார். வளிமண்டலத்தை
அச்சுறுத்தும் வாயு வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளம் தலைமுறையினரை உலகத் தலைவர்கள் ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த கிரேட்டாவுக்கு டைம் பத்திரிகை கவுரவம் செய்தது குறிப்பிடத்தக்கது.