கொரோனா காலம் வந்தது முதலேவும் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை திடீர் திடீரென பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் நடப்பு வருடம் (2024) ஆரம்பித்த சில வாரங்களிலேலே 46 ஐடி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றிய 7,500க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. அந்த 46 நிறுவனங்களில், கூகுள் நிறுவனமும் ஒன்று. கூகுள், தன் பங்கிற்கு நூற்றுக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.
இந்நிலையில் கடந்த வாரம் கூகுள் நிறுவனம் மேலும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்தவாரம் ‘முதல் காலாண்டு வருவாய் அறிக்கை’யை சமர்பித்த கூகுள் நிறுவனம், இந்த வாரம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கூகுள் தனது 'கோர்' பணியாளர்கள் குழுவில் சில பதவிகளை இந்தியா மற்றும் மெக்சிகோவிற்கு மாற்றுகிறது என்று தகவல் தெரியவந்துள்ளது.