ஆல்கஹாலை உற்பத்தி செய்யும் கோல்டன் பிஷ்

ஆல்கஹாலை உற்பத்தி செய்யும் கோல்டன் பிஷ்
ஆல்கஹாலை உற்பத்தி செய்யும் கோல்டன் பிஷ்
Published on

இன்று குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் செல்லப்பிராணியாக வளர்க்கும் கோல்டன் பிஷ், ஆல்கஹாலை உற்பத்தி செய்வது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

லிவர்பூல், ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் தங்க மீன்கள் மற்றும் க்ருஷியன் கார்ப் என்ற மீன்களின் 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் 50 மில்லி கிராம் அளவுக்கு ஆல்கஹாலை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக மீன்கள் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை சுவாசித்து உயிர் வாழ்கின்றன. ஆக்ஸிஜன் இல்லையென்றால் இறந்துவிடும். ஆனால் ஆக்ஸிஜன் இல்லாத சூழலிலும் மீன்கள் உயிர் வாழும் திறன் உடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அவை ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தங்கமீன்கள் குளிர்காலங்களில் உறைந்த ஏரிகளுக்கு கீழே இருக்கும்போது அந்த சூழலை எதிர்கொள்ள ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றன. இவை தம்மில் உற்பத்தி செய்யப்படும் இலத்திரிக் அமிலத்தினை பயன்படுத்தியே எத்தனால் வகை ஆல்கஹாலை உற்பத்தி செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com