"கஞ்சா செடியை மேய்ந்துவிட்டு போதையில் ஆட்டம் போட்ட ஆடுகள்" - எங்கே நடந்தது தெரியுமா?

கஞ்சா செடிகளை மேய்ந்துவிட்டு போதையில் ஆடுகள் ஆட்டம் போட்ட வினோத சம்பவம் கிரீஸ் நாட்டில் நடந்துள்ளது.
ஆட்டு மந்தை
ஆட்டு மந்தை File image
Published on

இந்தியாவில் கஞ்சா செடி வளர்ப்பதற்கு முழுமையாக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ஒரு சில நாடுகளில் மருத்துவத்திற்குப் பயன்படுவதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் மத்திய கிரீஸின் தெசலி பகுதியில் அல்மிரோஸ் நகருக்கு அருகே விவசாயி ஒருவர் மருத்துவக் காரணங்களுக்காகக் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். இங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை அறுவடை செய்து ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். அந்த நேரத்தில் புயல் அடித்ததால் அவர் வளர்த்து வந்த ஆடுகளை வெளியில் மேயவிடாமல் ஆட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார்.

கஞ்சா செடி
கஞ்சா செடி

இதனையடுத்து ஒரு நாள் ஆடுகள் அனைத்தும் வினோதமாக நடந்து கொண்டுள்ளது. வேகமா கத்தியும், மேலும் கீழும் குதித்தும் ஆட்டம் போட்டுள்ளன. இதனைப் பார்த்த அவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. கஞ்சா செடி வைத்த அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்குக் கஞ்சா செடிகள் குறைந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போதுதான் ஆடுகள் கஞ்சா செடிகளை மேய்ந்துள்ளது அவருக்குத் தெரியவந்துள்ளது.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், "இந்த சம்பவத்திற்கு அழுவதா? இல்லை சிரிப்பதா? என்றே தெரியவில்லை. வெப்பம் அதிகமா இருக்கும் காலங்களில் எங்களுக்கு விளைச்சல் இருக்காது. அதேபோல இயற்கைப்பேரிடர் காலங்களில் மகசூல் இருக்காது. தற்போது என்னுடைய ஆடுகளால் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்துவிட்டேன்.இனி என்ன செய்வது எனப் புரியவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com