இனி GMail-லிலும் வருகிறது "end-to-end encryption" சேவை; ஆனால் இவர்களுக்கு மட்டும்தானாம்!

இனி GMail-லிலும் வருகிறது "end-to-end encryption" சேவை; ஆனால் இவர்களுக்கு மட்டும்தானாம்!

இனி GMail-லிலும் வருகிறது "end-to-end encryption" சேவை; ஆனால் இவர்களுக்கு மட்டும்தானாம்!
Published on

வாட்ஸாப், டெலிக்ராம, ஐமெசேஜ் போன்ற செயலிகளில் "எண்டு-டு-எண்டு" என்க்ரிப்ஷன் வசதி உள்ளதுபோல் ஜிமெயிலிலும் அச்சேவையை கொண்டுவர முடிவு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

ஆம், கூகுள் தனது மின்னஞ்சல் சேவைகளுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான "end-to-end encryption"-ஐ அறிவித்துள்ளது. தனியுரிமையை மேம்படுத்துதல் மற்றும் மின்னஞ்சல் விநியோகங்களை பாதுகாத்தல் ஆகிய காரணங்களுக்காக, கூகுள் இணையத்தில் இச்சேவை கொண்டு வரப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த அம்சம் தற்போது பீட்டாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கூகுளை பொறுத்தவரை அதன் Google Workspace, Enterprise Plus, Education Plus மற்றும் Education Standard, சாதாரண கல்வி கணக்குகளுக்கு மட்டுமே இச்சேவை கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது ஜிமெயில் புதிதாக `கிளையன்ட் சைட் என்க்ரிப்ஷன்’ கொண்டு வரப்படுகிறது. அதாவது பயனர் மற்றும் அவர்களின் இணைப்புகள் என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. இதன்மூலம் மூன்றாம் நபர் மற்றும் கூகுள் நிறுவனமே கூட அந்த மெயில்-ஐ படிக்க முடியாதபடி நிலை மாறும். குறிப்பாக இணைப்புகளுடன் கூடிய மின்னஞ்சலில் உள்ள பயனர்களின் அனைத்து முக்கியமான தரவுகளும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம், நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு நேரடியாக உங்கள் மொபைலில் குறியாக்கம் செய்யப்படுகிறது. மேலும் டெலிவரிக்குப் பிறகு யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களால் மட்டுமே அது டிகோட் செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி,Google Workspace, Enterprise Plus, Education Plus மற்றும் Education Standard ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை இந்த பீட்டா பதிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையன்றி ஏற்கெனவே கூகுள் டிரைவ், டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடுகள், கூகுள் மீட் மற்றும் கூகுள் கேலெண்டர் ஆகியவற்றில் ஏற்கனவே கிளையன்ட் சைட் என்க்ரிப்ஷனை Google வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், பணியிட பயனர்களுக்குக்காக மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட ஜிமெயில் கணக்குகள் வைத்துள்ளோரும் இதை பெற, இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

-அருணா ஆறுச்சாமி

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com