அடேங்கப்பா..! இவ்வளவு உயரமா? கின்னஸில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய ஒட்டகச்சிவிங்கி

அடேங்கப்பா..! இவ்வளவு உயரமா? கின்னஸில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய ஒட்டகச்சிவிங்கி
அடேங்கப்பா..! இவ்வளவு உயரமா?  கின்னஸில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய ஒட்டகச்சிவிங்கி
Published on

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மிருகக்காட்சி சாலையில் உள்ள ஒட்டகச்சிவிங்கிதான் உலகிலேயே மிக உயரமானது என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பன்னிரெண்டு வயதுள்ள அதன் உயரம் 18 அடி எட்டு அங்குலம்.

உயரத்தில் சாதனை படைத்துள்ள ஒட்டகச்சிவிங்கிக்கு ஃபாரஸ்ட் எனப் பெயரிட்டுள்ளனர். மிருகக்காட்சி சாலை அதிபரான பிந்தி சூ இர்வின், அந்த ஒட்டகச்சிவிங்கியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். அந்த மிருகக்காட்சி சாலை வனப்பாதுகாவலரான ஸ்டீவ் இர்வின் குடும்பத்திற்குச் சொந்தமானது.    

“எங்களுடைய இனிமையான ஃபாரஸ்ட் உலகில் வாழும் உயரமான ஒட்டகச்சிவிங்கி என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அது உயர்ந்த இதயம் படைத்தது” என்று பிந்தி இர்வின் பதிவிட்டுள்ளார்.  

இந்த ஒட்டகச்சிவிங்கியின் உயரத்தை அளப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதாக கின்னஸ் சாதனைப் புத்தக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. அதற்காக ஊழியர் ஒருவர் அளவுகோல் கம்பத்தை உருவாக்கியதாகவும், அதை அருகில் கட்டி உயரம் பார்க்கவேண்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஃபாரஸ்ட் என பாசமாக அழைக்கப்படும் உயரமான ஒட்டகச்சிவிங்கி 12 குட்டிகளின் தந்தை. விரைவில் புதிய குட்டிக்கும் பிரசவம் பார்க்க இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com