"MELODI"- இத்தாலிய பிரதமரின் எக்ஸ் தள வைரல் வீடியோ

இந்த ஆண்டு ஜி-7 உச்சி மாநாடு இத்தாலி நாட்டின் புகலியாவில் ஜூன் 13-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ, போப் பிரான்சிஸ் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிபுதிய தலைமுறை
Published on

இந்த ஆண்டு ஜி-7 உச்சி மாநாடு இத்தாலி நாட்டின் புகலியாவில் ஜூன் 13-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ, போப் பிரான்சிஸ் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தவகையில், அனைத்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நிறைவுசெய்துவிட்டு இந்தியா புறப்பட்டார் நரேந்திர மோடி.

இந்நிலையில், இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியும் , இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் எடுத்த செல்ஃபி மற்றும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெலோனி எடுத்த புகைப்படத்தில், இரு தலைவர்களும் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். வைரலாக பரவும் வீடியோவில், மெலோனி "மெலோடி குழுவிலிருந்து வணக்கம்" என்று கூறுவதைக் கேட்க முடியும். பிரதமர் மோடி அவருடன் நிற்கிறார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

"மெலோடி" என்ற வார்த்தை கடந்த ஆண்டு துபாயில் நடந்த COP28 உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் மெலோனியின் சந்திப்புக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து, இம்முறை எடுக்கப்பட்ட வீடியோவில் “ஹாய் ஃப்ரெண்ட்ஸ், #மெலோடியில் இருந்து, மெலோடி குழுவிலிருந்து வணக்கம் " என X-ல் பதிவிட்டுள்ளார்.

ஜி 7 உச்சி மாநாட்டில் இந்தியாவின் தேவை

பொருளாதாரத்தில் முன்னேறிய கனடா , பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் , யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா என 7 நாடுகளின் அமைப்பு ஜி 7 என்று அழைக்கப்படுகிறது.

இத்தாலியில் நடைபெறும் 50-ஆவது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். தனது மூன்றாவது பதவி காலத்தில் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்தது.

ஜி-7 மாநாட்டில் இது இந்தியாவின் 11-ஆவது பங்கேற்பு என்பதோடு, மோடி தொடர்ந்து ஐந்தாவது முறையாக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாத போதும் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக இருந்து வருகிறது.

இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார எழுச்சி இதன் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனி தவிர்த்து ஜி 7 அமைப்பில் உள்ள வேறுபிற நாடுகளின் பொருளாதாரத்தை தவிர இந்தியாவின் பொருளாதாரம் பெரிதாக கருதப்படுகிறது.

பொருளாதார ரீதியாகவும் புவிசார அரசின் ரீதியாகவும் சீனாவை கட்டுப்படுத்த மேற்குலக நாடுகளும் முயற்சிப்பதால் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு மேற்கு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக இருந்தபோது, இந்தியா நடுநிலை வகித்தது. இந்த சூழலில் இந்தியாவை தங்களது பக்கம் வைத்து முக்கிய நட்பு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று மேற்குலக நாடுகள் நினைக்கின்றன.

டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகித்ததன் மூலம் உலகளாவிய பல சர்ச்சைக்குரிய விஷயங்களில், ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக வெளியுறவு செயலர் வினைய் வத்ரா தெரிவித்துள்ளார்.

உலகத்தின் நலன்கள் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வருவதே இந்தியா நோக்கமாக கொண்டிருப்பதாக வெளியுறவு செயலர் வினைய் வத்ரா கூறுவதன் மூலமாக ஜி7 நாடுகளின் கூட்டமைப்பிற்கு இந்தியாவின் தேவை ஏன் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாம் I LOVE YOU GUYS” - முதலீட்டாளர்கள் கூட்டத்தில் எலான் மஸ்க்கிற்கு ஜாக்பாட்; எகிறும் சொத்துமதிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com