வாரம் 4 நாட்கள் வேலை: நாளை முதல் சோதனையில் இறங்கும் ஜெர்மனி.. குறைவான வேலைநேர பட்டியலில் 21 நாடுகள்!

உலகில் வளர்ந்த நாடுகள் சில, குறைவான வேலைநேரத்தைக் கடைபிடித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ஜெர்மனியும் இணைய உள்ளது.
model image
model imagefreepik
Published on

வாரம் 4 நாட்கள் வேலை: களத்தில் இறங்கும் ஜெர்மனி

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரச் சிக்கலை சந்தித்தன. அதிலிருந்து மீண்டு எழுவதற்கு பல்வேறு முயற்சிகளை தற்போதும் நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், ஜெர்மனியும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள குறைவான வேலைநேரத்தைக் கடைபிடிக்க உள்ளது.

அதன்படி நாளை (பிப்.1) முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர உள்ளது ஜெர்மனி. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறையாக அளிக்கப்பட இருக்கிறது. இதனை கடைபிடிப்பதன்மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி அரசு எதிர்பார்க்கிறது.

இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என அந்நாட்டில் உள்ள பல தொழிலாளர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து, நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்தச் சோதனை நல்ல பலனை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இதில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தச் சோதனை அடுத்த 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்னையும் தீர்வுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், ஜெர்மனியின் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர், “இது பொருளாதார வளர்ச்சியை அச்சுறுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மாயமான மறுநாளே சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்! அமெரிக்காவில் தொடர்கதையாகும் மரணங்கள்!

குறைவான வேலைநேரத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகள்

ஏற்கெனவே வாரத்தில் 4 நாள் மட்டும் வேலைநேரத்தைக் கடைபிடிக்கும் பட்டியலில் 21 நாடுகள் உள்ளன.

1. ஆஸ்திரேலியா

2. ஆஸ்திரியா

3. பெல்ஜியம்

4. கனடா

5. டென்மார்க்

6. பிரான்ஸ்

7. ஜெர்மனி

8. ஐஸ்லாந்து

9. அயர்லாந்து

10. ஜப்பான்

11. நெதர்லாந்து

12. நியூசிலாந்து

13. நார்வே

14. போர்ச்சுகல்

15. ஸ்காட்லாந்து

16. தென்னாப்பிரிக்கா

17. ஸ்பெயின்

18. சுவிட்சர்லாந்து

19. இங்கிலாந்து

20. அமெரிக்கா

21. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

இதையும் படிக்க: கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாகிஸ்தானியர்களை காப்பாற்றிய இந்திய கடற்படை - 36 மணிநேரத்தில் திக் திக்!

4 நாட்கள் வேலை: இந்தியாவில் கிளம்பிய எதிர்ப்பு!

பெல்ஜியத்தில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். அதாவது, வாரத்தில் 40 மணிநேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை. இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக அந்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதுபோல், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் இத்தகைய சோதனைகள் வெற்றிகரமாக இருந்ததாகக் கூறுகிறது. 4 நாள் வேலை வார சோதனைகளில் பங்கேற்ற தொழிலாளர்கள் சிறந்த மன மற்றும் உடல் ஆரோக்கியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் பங்கேற்கும் நிறுவனங்களும் இதேபோன்ற முடிவுகளை எதிர்பார்க்கின்றன.

இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேர வேலை, வாரத்திற்கு 48 மணி நேரம் என 6 நாட்கள் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருக்கிறது. எனினும் கடந்த 2021ஆம் ஆண்டு, இந்தியாவிலும் தொழிலாளர்கள் இனி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனவும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்யலாம் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாகவும் அப்போது தகவல்கள் கிளம்பின. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: விமானப் பயணத்தில் திடீர் உடல்நிலை பாதிப்பு: ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com