அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடுவது ஜெர்மனியில் மீண்டும் தொடக்கம்

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடுவது ஜெர்மனியில் மீண்டும் தொடக்கம்
அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடுவது ஜெர்மனியில் மீண்டும் தொடக்கம்
Published on

அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஜெர்மனி அரசு மீண்டும் தொடங்கியுள்ளது

ரத்தம் உறைதல் பிரச்னை இருக்கிறது என வெளியான புகார்களால் ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய மருத்துவ முகமை அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை ஆய்வு செய்து அதை தொடர்ந்து பயன்படுத்தலாம் என ஒப்புதல் அளித்துள்ளது.

ரத்தம் உறைதல் மிகமிக குறைவான அளவிலேயே ஏற்பட்டுள்ளது என்றும் எனினும் இதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பே இல்லை என திட்டவட்டமாக கூற முடியாது எனவும் ஐரோப்பிய மருத்துவ முகமை தெரிவித்துள்ளது. இருப்பினும் தடுப்பூசியை தொடர்ந்து போடலாம் என்றும் ஆனால் தீவிர அறிகுறிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஜெர்மனியில் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. ஜெர்மனியை தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகளும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பயன்பாட்டை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் போடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com