ஜெர்மனியின் மூனிச் நகரில் புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய சர்வதேச மின்சார கார்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் புகழ் பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனம் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட காரை அறிமுகப்படுத்தியுள்ளது. முட்டை வடிவிலான இக்காரை பயன்பாட்டிற்கு பின் 100% மறு சுழற்சி செய்து வேறு பொருளாக மாற்ற முடியும் என இதை தயாரித்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்தே இக்கார் உருவாக்கப்பட்டது என்பது இதன் மற்றொரு சிறப்பு. ஐ விஷன் சர்க்குலர் என்ற இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது