கொரோனா வைரஸின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகளவில் இருந்தது.
படிப்படியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்க ‘ஜெர்மனி தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகிறது’ என அந்நாட்டின் மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
‘அண்மை நாட்களாக தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் சீராக அதிகரித்து வருகிறது. பொதுமக்களில் சிலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாதது தான் இதற்கு காரணம்’ என தெரிவித்துள்ளார் ஜெர்மன் நாட்டின் மருத்துவ சங்க தலைவர்.