ஜெர்மனியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்க அந்நாட்டின் மத்திய, மாகாண அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
புதிய விதிமுறைகளை அறிவித்த ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகம், மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் என்றும் கூறினார். முன்பைவிட வேகமாக பரவும் உருமாறிய கொரோனா தொற்று நிலைமையை மேலும் மோசமாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிகள் மூடல், நோய் தொற்று அதிகம் பரவும் பகுதிகளில் இருப்போருக்கு பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடு, தாக்கம் அதிகமுள்ள வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இரண்டு நெகடிவ் சான்றிதழ்கள் கட்டாயம் உள்ளிட்ட விதிமுறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 944 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரிட்டனில் மீண்டும் தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.