மாஸ்க்கை மறந்ததால் பதறியடித்து எழுந்த ஜெர்மனி அதிபர் அங்கெலா மெர்க்கெல் - வைரல் வீடியோ!

மாஸ்க்கை மறந்ததால் பதறியடித்து எழுந்த ஜெர்மனி அதிபர் அங்கெலா மெர்க்கெல் - வைரல் வீடியோ!
மாஸ்க்கை மறந்ததால் பதறியடித்து எழுந்த ஜெர்மனி அதிபர் அங்கெலா மெர்க்கெல் - வைரல் வீடியோ!
Published on

ஜெர்மனி நாட்டு அரசின் வேந்தரான அங்கெலா மெர்க்கெல் மாஸ்க்கை மறந்ததால் பதறியடித்துக் கொண்டு எழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. வூஹானில் கொரோனா பெருந்தொற்று பரவத்தொடங்கிய உடன் உலக பொது சுகாதார மையம் இந்த தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம் என தெரிவித்திருந்தது. அதையடுத்து பல்வேறு உலக நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஜெர்மனியில் இரண்டாவது அலை வீசி வருகிறது. கடந்த பிப்ரவரி 5 முதல் 18 வரையிலான 14 நாட்களில் மட்டுமே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் அங்கெலா மெர்க்கெல் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் மறந்து போய் தனது மாஸ்க்கை போடியத்தில் வைத்துவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்துள்ளார்.  சில நொடிகளில் தான் மாஸ்க் அணியவில்லை என்பதை உணர்ந்த அவர் உடனடியாக பதறியடித்து எழுந்து போடியத்தில் இருந்த மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டு இருக்கையில் வந்து அமருகிறார். 

அவரது செயலை நெட்டிசன்கள் பரவலாக புகழ்ந்து வருகின்றனர். “நேர்மையான தலைவர், ஜெர்மனியர்கள் விதிகளை முறையாக பின்பற்றுபவர்கள்” என அந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் பறக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com