ரோஹிங்யா மக்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட இனப்படுகொலை என்று துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம்சாட்டி உள்ளார்.
மியான்மரில் ரோகிங்யா இஸ்லாமியர் மீதான தாக்குதல், திட்டமிடப்பட்ட இன அழிப்பு முயற்சி என துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் குற்றம்சாட்டி உள்ளார். மியான்மரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எதிராக நிற்பது துருக்கியின் தார்மிகக் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக, சுமார் 38 ஆயிரம் ரோகிங்யா இஸ்லாமியர் வங்கதேசத்துக்குத் தப்பிச் சென்றிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.