நியூயார்க் நகரில் அதுவொரு நவீன மளிகைக் கடை. உங்களுக்கு ஐந்து விநாடிகள் மட்டும் வழங்கப்படும். அந்த நேரத்திற்குள் நீங்கள் விரும்பும் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படியொரு வேடிக்கையான போட்டியில் ஒரு சிறுவன் எடுத்த பொருட்கள் பற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
அந்தச் சிறுவனுக்கு வயது 12 இருக்கலாம். அவன் எடுத்த பொருட்களில் அதிகம் இருந்தவை ப்ரெஷ் தயாரிப்புகள்தான். செயற்கை உணவுகளை குறைவாகவே அவன் எடுத்திருக்கிறான்.
ஸ்டோர் கேஷ் கவுண்டரில் உள்ள நபர்தான் வீடியோவை எடுத்திருக்கிறார். அந்தப் பையனிடம் எளிமையான கணிதம் தொடர்பான கேள்வியைக் கேட்கிறார். பின்னர் ஐந்து வினாடிகளில் தனக்குப் பிடித்த ஷாப்பிங் செய்துகொள்ளலாம் என்கிறார்.
சரியான பதிலை அந்தச் சிறுவன் சொன்னதும், கவுண்ட் டவுன் தொடங்குகிறது. முதலில் சிறுவன் வாழைப்பழம், அவக்கோடா, வெங்காயம் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறான். பிறகுதான் செயற்கை உணவின் பக்கம் வருகிறான். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிட, அது வைரலாகி பல லட்சம் பேரிடம் சென்றடைந்துள்ளது.