குளிர்பானமான ‘கோக்’-கை புறக்கணியுங்கள் என அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் சொல்லியிருந்த நிலையில் அவரது டேபிளில் கோக் இடம் பெற்றிருந்ததால் அதனை மக்கள் விமர்சித்துள்ளனர். தனது நீண்ட ஆலோசகரான ஸ்டீபன் மில்லாரின் ட்விட்டர் பதிவு ஒன்றில் டிரம்ப் தனது புதிய அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் தான் மேஜையின் மீது கோக் இருப்பதை கழுகு பார்வையால் அடையாளம் கண்டுள்ளனர் மக்கள்.
“எங்களை புறக்கணிக்க சொல்லிவிட்டு நீங்கள் மட்டும் பருகலாமா?” என அவரை விமர்சித்தும் வருகின்றனர்.
அண்மையில் ஜார்ஜியா விவகாரத்தினால் சில நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் அதிபராக பதவி வகித்த போது வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் மேஜையில் டயட் கோக் பெற ஒரு பட்டன் வைத்திருந்தார் என தெரியவந்துள்ளது. அந்தளவிற்கு டிரம்ப் கோக் பிரியர் ஆவார்.