கொழும்பு விமான நிலையம் சென்ற முருகன் உள்ளிட்ட மூவர் - விசாரணைக்கு அழைத்துச் சென்ற இலங்கை போலீசார்?

இலங்கை சென்ற அவர்கள் மூவரையும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றது குறித்து வழக்குப் பதிந்து கைது செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜிவ் வழக்கில் விடுதலை பெற்றவர்கள்
ராஜிவ் வழக்கில் விடுதலை பெற்றவர்கள்புதிய தலைமுறை
Published on

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படை தாக்குதலின்போது கொல்லப்பட்டார். இந்த வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்தநிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் திருச்சி முகாமில் முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகியோர் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவர்கள் மூவரும் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, திருச்சி முகாமில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மூவரும் நேற்றிரவு சென்னை அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு கொழும்பு செல்லும் விமானம் மூலம் மூவரையும் காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். இலங்கை சென்ற அவர்கள் மூவரையும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றது குறித்து வழக்குப் பதிந்து கைது செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: டெல்லி: சிறையில் கெஜ்ரிவால்..மனைவி சுனிதா உடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆலோசனை! அடுத்து என்ன?

ராஜிவ் வழக்கில் விடுதலை பெற்றவர்கள்
இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை! தீர்ப்பின் முழுவிவரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com