பாக். விமானநிலையத்தில் நவாஸ் ஷெரிப் அதிரடி கைது

பாக். விமானநிலையத்தில் நவாஸ் ஷெரிப் அதிரடி கைது
பாக். விமானநிலையத்தில் நவாஸ் ஷெரிப் அதிரடி கைது
Published on

பிரதமர் பதவியில் இருந்து நவாஸை நீக்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றங்களில் நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே லண்டன் நகரில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவியை சந்திப்பதற்காக நவாஸ் ஷரிப் மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார். நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பும் நிலையில் அவர் உடனடியாக கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், பாகிஸ்தான் வந்த நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com