ரஷ்யாவின் யகுதியா என்ற பகுதியில் உள்ள காட்டில் ஏற்பட்ட தீ பலத்த காற்று காரணமாக பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 22 இடங்களில் 4,500 ஹெக்டேர் வனப்பரப்பில் தீ பரவியுள்ள நிலையில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் கடும் புகை மூட்டம் நிலவுவதால் மக்கள் வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு உள்ளேயே பாதுகாப்பாக இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுப்படுத்த ரஷ்ய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சைபீரிய பகுதியில் மட்டும் இந்தாண்டு 8 லட்சம் ஹெக்டேரில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதற்கு பருவ நிலை மாற்ற பிரச்னையே காரணம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது