இஸ்ரேலில் பெண் சிறைக்காவலர்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட கில்போவா சிறைச்சாலையில் பணியாற்றும் ஒரு பெண் காவலர் அந்த நாட்டு தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அந்நாட்டையே உலுக்கும் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்தார். “பாதுகாப்பு தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஒரு பாலஸ்தீனிய கைதியால் நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். என்னைப் பாதுகாப்பார்கள் என்று நான் நினைத்த எனது தளபதிகள், எனது நண்பர்கள், என் உயரதிகாரிகள் என்னை அந்த பயங்கரவாதியிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். தனது மேலதிகாரிகளால் பாலியல் அடிமையாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன் ” என்று அவர் தெரிவித்தார்.
கடும் அதிர்வலைகளை கிளப்பிய இப்பேட்டி தொடர்பாக அந்நாட்டு பிரதமருடம் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் Yair Lapid தனது அமைச்சரவையில் பேசிய போது, “ஒரு காவலர் ஒரு பயங்கரவாதியால் கற்பழிக்கப்படுவதை ஒரு போதும் பொறுக்க முடியாது” என்று தெரிவித்தார். “பெண் காவலர் கூறிய புகார் விசாரணை செய்யப்படும். அவருக்கு உதவி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று கூறினார்.